பொது செப்டம்பர் 13,2022 | 00:23 IST
தேனி மாவட்டம் கூடலுரை சேர்ந்தவர் தர்மராஜ், வயது 23. ராணுவ வீரர். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர், நண்பர் லியோ சாமுடன் சொந்த வேலையாக கம்பம் பகுதிக்கு சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கூடலூர் துர்க்கை அம்மன் கோவில் அருகே வந்தபோது எதிரே வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதினர். தர்மராஜ், சாம் படுகாயமடைந்தனர். இன்னொரு பைக்கை ஓட்டிவந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தர்மராஜ், சாம் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர். கூடலூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து