மாவட்ட செய்திகள் செப்டம்பர் 13,2022 | 00:00 IST
இந்திய கூடைப்பந்து கழகமும், புதுச்சேரி கூடைப்பந்து கழகமும் இணைந்து நடத்தும் தென்னந்திய தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி உப்பளம் ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. 16-ந்தேதி வரை நடைபெறும், இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என 12 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு-தெலுங்கானா அணிகள் மோதின. ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழ்நாடு அணி, ஆட்டத்தை தன் பக்கம் கொண்டு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 73-39 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவை வீழ்த்தி, தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆந்திரா-தெலுங்கானா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 68-51 புள்ளி கணக்கில் தெலுங்கானா அணி வெற்றி பெற்றது. போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் அணிகள், நவம்பர் மாதம் உதயப்பூரில் நடக்கும் தேசிய கூடைபந்து போட்டிக்கு தகுதி பெறுவா்
வாசகர் கருத்து