மாவட்ட செய்திகள் செப்டம்பர் 13,2022 | 00:00 IST
பாரதி நினைவு நூற்றாண்டையொட்டி 2 லட்சத்து 23 ஆயிரம் சதுர அடியில் பல கோடி ரூபாய் செலவில் "காணிநிலம் திட்டம்" என்ற பெயரில் மகாகவி பாரதியாரின் அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய அருங்காட்சியகம் கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. பல்கலை நுழைவாயிலில் மகாகவி பாரதி மணிகூண்டு துவக்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பாரதியார் கவிதைகள் ஒலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு வெள்ளோட்டமாக நேற்று (செப்.12-2022) மணிக்கூண்டில் கவி அஞ்சலி, உரையஞ்சலி, மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்கலைக்கழகத்தில் உள்ள கடைநிலை ஊழியர் முதல் துணைவேந்தர் வரை அனைவரும் கவி அஞ்சலி வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இனி அனைவரும் தங்கள் கையெழுத்தை தமிழில் இட வலியுறத்தப்பட்டது.
வாசகர் கருத்து