அரசியல் செப்டம்பர் 13,2022 | 17:49 IST
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொகுதியான திருச்செந்துார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10 நாளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீருக்கு ஏற்பாடு செய்யும்படி அனைத்து வார்டு கவுன்சிலர்களும் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். ஆனாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. பலமுறை முயற்சித்தும் பிரச்னையை தீர்க்க முடியாத விரக்தியில் 3 வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபன் வாட்ஸ் அப்பில் ஆடியோவை பதிவிட்டுள்ளார். மக்களுக்கு குடிநீர் கூட கொடுக்காமல் இருந்தால் பிய்ந்து போன செருப்பால் அடிப்பார்கள் என அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து