மாவட்ட செய்திகள் செப்டம்பர் 14,2022 | 00:00 IST
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திம்மக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்தபதி வரதராஜன். இவர் கடந்த 2010 ஆண்டு 23 அடி உயர நடராஜர் ஐம்பொன் சிலையை ஒற்றை வார்ப்பு முறையில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதன்படி 23 அடி உயரம், 17 அடி அகலம் மற்றும் 15,000 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய ஐம்பொன் ஆனந்த தாண்டவ நடராஜர் சிலையை உருவாக்கினார். பத்தாண்டு கடின உழைப்பில் உருவான சிலையில் 51 சிவ அட்சரத்தை குறிக்கும் வகையில் 51 தீச்சுடர்கள், திருவாச்சியில் 52 சிம்மங்கம், 56 பூதகணங்கள், 102 தாமரை மலர்கள், 2 மகர பறவைகள், 34 நாகங்களின் உருவங்களையும் கொண்டதாக சிலை தத்ரூபமாக அமைந்துள்ளது. இச்சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இச்சிலையை வேலுார் நாராயணி பீடத்தின் டிரஸ்டி சுரேஷிடம், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்படைத்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து