மாவட்ட செய்திகள் செப்டம்பர் 15,2022 | 00:00 IST
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் ஊராட்சி, ரேஷன்கடை பின்புறம் வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டியபோது 10ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர்கால விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது இச்சிலையை கிராம மக்கள் வழிபட்டனர். சிலையை பண்ருட்டி துணை தாசில்தார் சேகர் உள்ளிட்டோர் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர். கிராம மக்கள் பெருமாள் கோவில் கட்டி வழிபட விஷ்ணு சிலை தங்களுக்கு வேண்டும் என்றனர். இதனால் வருவாய்த்துறையினர் திரும்பி சென்றனர். பின்னர் தாசில்தார் கார்த்திகேயன், புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செல்வம், கொண்ட குழு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து, ஊராட்சிக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கார்த்திகேயன் உறுதியளித்தார். இதனையடுத்து விஷ்ணு சிலையை பண்ருட்டி தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர்.
வாசகர் கருத்து