மாவட்ட செய்திகள் செப்டம்பர் 15,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலியாஸ் கடை சாலையோரம் ஒரு குட்டியுடன் 6 காட்டு யானைகள் 3 நாட்களாக முகாமிட்டுள்ளன. இதனருகே டான்டீ அலுவலகம், கார்டன் மருத்துவமனை மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. யானைகள் ஒரே இடத்தில் நிற்பதால் இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தி கூட்டமாக நின்று யானைகளை ரசிக்கின்றனர். ஹாரனை ஒலித்து துன்புறுத்தினால் யானைகள் கோபப்படும். பிறகு நிலைமை விபரீதம் ஆகும் என்பதை சுற்றுலா பயணிகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே யானை அருகே செல்வது, ஹாரன் அடிப்பது, யானைகளை நின்று ரசிப்பது கூடாது, என வனத்துறையினர் கண்டிஷன் போட்டனர். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
வாசகர் கருத்து