மாவட்ட செய்திகள் செப்டம்பர் 15,2022 | 00:00 IST
புதுச்சேரி குருசுக்குப்பம் கிருஷ்ணராசு செட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில, கடற்கரை சாலையில் உள்ள சுப்பிரமணிய பாரதி பள்ளியின் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் அங்கு படித்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகளையும் ஒருங்கிணைத்து குரூசுக்குப்பம் பள்ளியில் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு பள்ளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டதால் சில ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குருசுகுப்பம் அரசு பள்ளியில் மாணவிகள் இன்று பள்ளி முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவிகள் கூறும்போது பள்ளியில் அனைவரும் அமரும் அளவிற்கு இட வசதிகள் இல்லை, குடிநீர் பற்றாக்குறை உள்ளது, கழிவறை செல்ல காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, என தெரிவித்தனர்.
வாசகர் கருத்து