மாவட்ட செய்திகள் செப்டம்பர் 15,2022 | 00:00 IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். வைகை அணை நிரம்பிய நிலையில் 58 கிராம கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் தனியார் சார்பில் மொபைல் போன் டவர் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அசுவமா நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் துணியை கட்டி விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 58 கிராம கால்வாய் வழியாக விரைவில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், என தாசில்தார் கருப்பையா உறுதியளித்தார்.
வாசகர் கருத்து