சம்பவம் செப்டம்பர் 15,2022 | 00:00 IST
கோவை கருமத்தம்பட்டி அருகே வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம். மளிகை கடை நடத்துகிறார். கடந்த மே மாதம் ஒரு வாலிபர், இவருக்கு அறிமுகம் ஆனார். அப்பகுதியில் கட்டட வேலை செய்வதாக கூறி பொருட்கள் வாங்கி செல்வார். கட்டட வேலையில் அஸ்திவாரம் தோண்டும் போது, தங்கப்புதையல் கிடைத்ததாக கூறிய அந்த வாலிபர், ஒரு பெரிய மாலையை சதாசிவத்திடம் காட்டினார். அதில் ஒரு துண்டை கொடுத்து தங்கமா? என சோதித்து பார்க்க கூறியுள்ளார். சதாசிவம் நகை வேலை செய்பவரிடம் சென்று சோதித்ததில் தங்கம் என தெரிந்தது. மொத்த மாலை 1 கிலோ இருக்கும். தங்களுக்கு 10 லட்ச ரூபாய்க்கு தருகிறேன் என வாலிபர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய சதாசிவம், 10 லட்ச ரூபாய் கொடுத்து அந்த மாலையை வாங்கினார். சில நாட்கள் கழித்து அதனை சோதித்து பார்த்த போது, அத்தனையும் பித்தளை என தெரிந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதாசிவம் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடி செய்த வாலிபரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து