அரசியல் செப்டம்பர் 16,2022 | 08:22 IST
நாமக்கல்லில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். திமுகவுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என மக்கள் நொந்து போயுள்ளனர். சொத்து வரியுடன், மின் கட்டணமும் உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் மின் வெட்டும் இல்லை; கட்டண உயர்வும் இல்லை. நிம்மதியாக இருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டில் மதுரை அமைச்சர் 100 கோடி ரூபாய் செலவில், தன் மகன் திருமணத்தை நடத்தியுள்ளார். முதல்வரும் நேரில் வாழ்த்தினார். இதன் மூலம் கொள்ளையடிக்க முதல்வரே பச்சைக்கொடி காட்டுவது தெரிகிறது என்றார்.
வாசகர் கருத்து