Advertisement

முதுமக்கள் தாழியில் கிடைத்த 8 பொருட்கள்!

மாவட்ட செய்திகள் செப்டம்பர் 16,2022 | 11:44 IST

Share

சிவகங்கை, கொந்தகையில் 8ம் கட்ட அகழாய்வு நடக்கிறது. இதுவரை 57 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. நேற்று 2 முதுமக்கள் தாழிகளை திறந்தனர். ஒன்றில் சிறிய பானைகள், கிண்ணங்கள், மூடிகள் என 8 பொருட்களும், மனித மண்டை ஓடு துண்டுகளும் இருந்தன. மற்றொன்றில் ஒரு பானை, மண்டை ஓடு இருந்தது. இதற்கு முன் திறந்த ஒரு தாழியில் 74 சூது பவளங்கள், ஒரு செப்பு துண்டு இருந்தது. பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடல் அல்லது எழும்புகளை அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் சேர்த்து பெரிய மண் பானை வைத்து புதைப்பர். இது தான் முதுமக்கள் தாழி. கொந்தகை பகுதி, அக்காலத்தில் ஈமக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X