மாவட்ட செய்திகள் செப்டம்பர் 16,2022 | 00:00 IST
இந்துக்கள் பற்றி திமுக எம்பி ஆ ராசா அவதுாறாக பேசினார். அவரது பேச்சு இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசாவை கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் பாஜகவினர் ஸ்ரீரங்கம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதற்கான ரசீது வழங்கவில்லை. இதைக் கண்டித்து போலீஸ் ஸ்டேஷனை நள்ளிரவு முற்றுகையிட்டனர். இரவு உணவை அங்கேயே சாப்பிட்டு விட்டு காத்திருக்கு போராட்டத்தில் குதித்தனர். காலையில் ரசீது தருவதாக போலீசார் கூறினர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் பாஜகவினர் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து