பொது செப்டம்பர் 16,2022 | 14:51 IST
கல்பாக்கம் அடுத்த வாயலுாரில் 59 வயதான பாதிரியார் சார்லஸ், மேரியெல்லா என்ற குழந்தைகள் காப்பகம் நடத்தினார். இங்கு தங்கி படித்த 13 வயது சிறுமியை பாதிரியார் சார்லஸ், அவரது மகன் ஜேம்ஸ் வயது 29, ஆகியோர் பலாத்காரம் செய்தனர். சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பி சென்னை உறவினரிடம் தஞ்சமடைந்தார். சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. உறவினர் போலீசில் புகார் அளித்தனர். பாதிரியார் மகன் ஜேம்சை போக்சோவில் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பாதிரியார் சார்லஸ் ஒன்றரை ஆண்டுக்குப்பின் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து