மாவட்ட செய்திகள் செப்டம்பர் 17,2022 | 00:00 IST
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகர் பகுதி அருகே பிரதான வடிகால் ஆறான உப்பனாறு அமைந்துள்ளது. விளைநிலங்கள் மட்டுமின்றி 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வடிகால் வசதி பெற்று வருகின்றன. பருவமழை காலங்களில் ஆற்றின் இரு கரையும் தொட்டு தண்ணீர் செல்லும். சில மாதங்களாக உப்பனாற்றின் கரை சீரமைப்பு பணிகள் நடந்தது. இதற்காக ஆற்றில் இருந்தே மண்ணை எடுத்து கரையை பலப்படுத்தினர். பலமில்லாத மண்ணை பயன்படுத்தி கரை சீரமைத்ததால் சாதாரண மழைக்கே கரை பாதிக்கு மேல் அரிப்பு ஏற்பட்டு மண் ஆற்றில் சென்றுள்ளது. இதே நிலை நீடித்தால் எஞ்சிய கரையும் ஆற்றில் செல்லும் நிலை ஏற்படும். எனவே மழைக்காலம் தொடங்கும் முன்பாக உப்பனாற்றின் கரையை பலபடுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து