மாவட்ட செய்திகள் செப்டம்பர் 18,2022 | 00:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் மாணவி மரணத்தால் சூறையாடப்பட்ட தனியார் பள்ளியை சீரமைக்கவும், திறக்கவும் அனுமதி கோரி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதனை ஏற்று, பள்ளியை சீரமைக்க நிர்வாகத்திற்கு 45 நாட்கள் அனுமதி வழங்கி கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷர்வன்குமார் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அலுவலர், போலீசாரின் கண்காணிப்பில் பணிகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து