மாவட்ட செய்திகள் செப்டம்பர் 18,2022 | 00:00 IST
திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பாக (டிசெட்) திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக திருப்பூர் பள்ளிகளுக்கு இடையேயான 27 வது நிட் சிட்டி வாலிபால் போட்டிகள் சிறுபூலுவபட்டி டிசெட் மைதானத்தில் நடந்தது. தொழிலதிபர் செல்வராஜ் துவக்கி வைத்தார். டிசெட் தலைவர் நிக்கான்ஸ் வேலுச்சாமி வரவேற்றார். வாலிபால் கழக செயலாளர் சண்முகசுந்தரம், சர்வதேச வாலிபால் வீரர் தேவராஜன் முன்னிலை வகித்தனர். இதில் 19 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். சப் சீனியர் பிரிவில் 16 அணிகள், சீனியர் பிரிவில் 16 அணிகள் களம் கண்டுள்ளது.
வாசகர் கருத்து