மாவட்ட செய்திகள் செப்டம்பர் 18,2022 | 00:00 IST
கோவை சரவணம்பட்டி அருகே கீரணத்தம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் நள்ளிரவு காட்டெருமை ஒன்று புகுந்தது. அங்கும், இங்குமாக நடமாடியது. அச்சமடைந்த குடியிருப்பு வாசிகள் வீடுகளை பூட்டிக் கொண்டு வீட்டிற்குள் முடங்கினர். வனச்சரகர் அருண்குமார் தலைமைல் 30 பேர் கொண்ட குழு காட்டெருமையை பிடித்து உடல்நிலையை கண்டறிந்த பின் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வாசகர் கருத்து