மாவட்ட செய்திகள் செப்டம்பர் 18,2022 | 00:00 IST
நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், கட்டுரை , நாடகம், சினிமா விமர்சனம், அரசியல் கட்டுரைகள், நேர்காணல்கள், ஆ என தனது எழுத்து உலகில் தனி வாசகர் வட்டத்தினை கொண்டுள்ள எழுத்தாளர் சாரு நிவேதாவிற்கு உலக அளவில் வாசகர்கள் உள்ளனர். ஆண்டிற்கு 2 முறை தனது புதிய வாசகர்களே சந்தித்து அவர்களுடன் தன் எழுத்துக்கள் மீதான எண்ணங்கள் குறித்து கலந்துரையாடுவது சாருவின் வழக்கம். தமிழக மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட புதிய வாசகர்களுடன் புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில்லில் சாருநிவேதிதா கலந்துரையாடினர். அப்போது, ஜனநாயக சுழற்சியால் பிராமணர்கள் சமஸ்கிருத மொழியை கைவிட்டதால் வரலாற்றில் வேதங்களையும் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை மொழிபெயர்ப்பு செய்ய தற்போது ஒருவரும் இல்லை என்றும் இதனால் மொழி மீதான வரலாற்று உண்மைகள் மறைந்து போனதாக வேதனையுடன் தெரிவித்தார். சாரு நிவேதாவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட வாசகர் ஒருவர், உங்கள் எழுத்துக்களால் தான் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு உங்களை என் ஆன்மாவாக கொண்டு வாழ்கிறேன் என்று உருக்கத்துடன் தெரிவித்தது சக வாசகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து