மாவட்ட செய்திகள் செப்டம்பர் 18,2022 | 00:00 IST
புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சளி, இருமல் மற்றும் காய்ச்சலுடன் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகள் துவுங்கி 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று 650 பேர் வெளிபுற சிகிச்சை பெற்றுள்ளனர்.அதில் 65 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 155 பேரும் காரைக்காலில் 12 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
வாசகர் கருத்து