மாவட்ட செய்திகள் செப்டம்பர் 19,2022 | 00:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் மதிவாணன்.வயது 54. நேற்று முன்தினம் பைக்கில் சென்ற போது மாடு குறுக்கே வந்ததால், சடன் பிரேக் போட்டார். மாடு நகர்ந்து விட்டது.மதிவாணன் சாலை ஓரத்தில் கிடந்த ஜல்லி மீது விழுந்தார். இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதிவாசிகள் அவரை அறந்தாக்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நர்ஸ் ஒருவர் கால் விரலுக்கு தையல் போட்டார். மதிவாணன் வீட்டுக்கு சென்ற பிறகு விரலில் கொடூரமாக வலித்தது. தனியார் ஆஸ்பிடலுக்கு சென்றார். அங்கு எக்ஸ் ரே எடுத்தனர். விரலுள் ஜல்லி கற்கள் இருந்தது. அதை நீக்காமல் அரசு மருத்துவமனையில் தையல் போட்டது தெரிந்தது. தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தையலை பிரிந்து ஜல்லியை அகற்றினர். அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஒரு நர்ஸ் அலட்சியமாக இருந்ததால், எனக்கு இப்படி நடந்தது. சிறிய காயத்துக்கு இந்த நிலை என்றால், மற்ற சிகிச்சைகளுக்கு வருவோர் நிலை என்ன என கேட்கிறார் மதிவாணன்.
வாசகர் கருத்து