மாவட்ட செய்திகள் செப்டம்பர் 19,2022 | 00:00 IST
4% இட ஒதுக்கீட்டில் அரசு வேலை வழங்க வேண்டும், குடிசை மாற்று வாரிய வீடுகளை கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும், OAP உதவித்தொகையை 10,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் குறைதீர்க்கும் முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடந்த இடத்திற்கு நேரில் வந்த கலெக்டர் சமீரன் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து