மாவட்ட செய்திகள் செப்டம்பர் 19,2022 | 00:00 IST
இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரிப் பண்டிகை 26ந் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது இதனையடுத்து தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள கைவினைத் தொழில் செய்வோர் கூட்டுறவு குடிசை தொழிற்சங்கத்தில் கொலு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. கண்காட்சியில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப் பொருட்களினால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் மற்றும் சுவாமி பொம்மைகள் கண்காட்சி, விற்பனை வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி அக்டோபர் 6ந் தேதி வரை நடக்கிறது
வாசகர் கருத்து