மாவட்ட செய்திகள் செப்டம்பர் 19,2022 | 00:00 IST
திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், 27 -வது நிட்சிட்டி வாலிபால் போட்டி, சிறுபூலுவப்பட்டி டிசெட் மைதானத்தில் கடந்த, 18 ம் தேதி துவங்கியது. 19 பள்ளி அணிகள், மூத்தோர் பிரிவில், மிக மூத்தோர் பிரிவில் தலா, 16 அணிகள் பங்கேற்றன. அரையிறுதியை தொடர்ந்து , இறுதி போட்டிகள் இன்று நடந்தது. மாணவர் மூத்தோர் பிரிவில், வித்ய விகாசினி பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் பிரன்ட்லைன் பள்ளி அணியை வென்றது. இப்பிரிவில் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாவது, நான்காவது இடத்தை பிடித்தனர். மிக மூத்தோர் பிரிவில், வேலவன் பள்ளி அணி, பெருமாநல்லுார் அரசு ஆண்கள் பள்ளி அணியை, 2 -0 என்ற செட் கணக்கில் வென்றது. பிரன்ட்லைன் பள்ளி மூன்றாமிடத்தையும், ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி நான்காமிடத்தையும் பெற்றது. மாணவியர் மூத்தோர் பிரிவில் வித்ய விகாசினி பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில் செயிண்ட் ஜோசப் பள்ளி அணியை வென்றது. இன்பேண்ட் ஜீசஸ் பள்ளி மூன்றாமிடத்தையும், லிட்டில் கிங்டம் பள்ளி நான்காமிடத்தையும் பெற்றது. மாணவியர் மிக மூத்தோர் பிரிவில், வித்யவிகாசினி பள்ளி அணி, வேலவன் பள்ளி அணியை, 2-1 என்ற செட் கணக்கில் வென்றது. இப்பிரிவில் ஜெய்வாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடத்தையும், ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி நான்காமிடத்தையும் பெற்றது. பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட வாலிபால் கழக தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். டி செட் சங்க துணைத்தலைவர் காந்திராஜன், பொருளாளர் காந்திராஜன் முன்னிலை வகித்தனர். முன்னதாக, டி செட் தலைவர் வேலுச்சாமி வரவேற்றார். வெற்றிபெற்ற அணியினருக்கு சாம்பியன் கோப்பையும், வீரர், வீராங்கனைகளுக்கு தனி நபர் வெற்றிக்கோப்பைகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன
வாசகர் கருத்து