மாவட்ட செய்திகள் செப்டம்பர் 20,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தென்னிந்திய தேயிலை தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 129 வது ஆண்டு மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் தேயிலை இலை பறிக்கும் கருவிகள், தேயிலை தூளின் தரம் உயர்த்தும் நீராவி இயந்திரங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது. இந்திய தேயிலை வாரியம் சார்பில் நீலகிரியில் தயாராகும் 7,000 ரூபாய் மதிப்பிலான தரம் உயர்ந்த சில்வர் டிப்ஸ், ஒயிட் டீ மற்றும் 30,000 ரூபாய் மதிப்பிலான டார்ஜ்லிங் டீ உட்பட பல்வேறு தேயிலை வகைகளும் அறிமுகம் செய்யப்பட்டது. நீலகிரி, அஸ்சாம், டார்ஜ்லிங் உள்ளிட்ட இடங்களின் காலநிலைக்கு ஏற்ப தரம் நிறைந்த இந்த டீத்தூள்கள் குறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆர்கானிக் உரங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. தேயிலை விவசாயிகள், தேயிலை எஸ்டேட் அதிபர்கள் பங்கேற்றனர். இக்கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது.
வாசகர் கருத்து