மாவட்ட செய்திகள் செப்டம்பர் 21,2022 | 00:00 IST
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலின் 12 ம் ஆண்டு திருக்கல்யாண மஹோற்சவம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் இரண்டு மாலைகளோடு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் பெருமாள் அருளோடு விரைவில் திருமணம் நடைபெறும் மற்றும் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமண விருந்து நடைபெற்றது.
வாசகர் கருத்து