பொது செப்டம்பர் 22,2022 | 10:28 IST
திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி லட்சுமி. இருவரும் திருநெல்வேலியில் இருந்து திருச்சிக்கு உறவினர் வீட்டுக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தனர். திருமங்கலம் அருகே ஆறுகண் பாலம் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது மூன்று வடநாட்டு இளைஞர்கள் லட்சுமி கழுத்தில் இருந்த செயினை பறிக்க முற்பட்டனர். லட்சுமி சுதாரித்துக் கொண்டு செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அதேநேரம், ஒரு ஆசாமி அபாயச்சங்கிலியை பிடித்து இழுக்க ரயில் குண்டாற்று பாலத்தில் நின்றது. 3 ஆசாமிகளும் தப்பி ஓடினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, ரயில்வே போலீசார் விரநை்து சென்று விசாரித்தனர். இந்த சம்பவத்தால் அரை மணி நேரம் கழித்தே ரயில் புறப்பட்டுச் சென்றது.
வாசகர் கருத்து