மாவட்ட செய்திகள் செப்டம்பர் 22,2022 | 00:00 IST
திருச்சி ஜங்ஷனுக்கு சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் ரயில் வந்து நின்றது. மீண்டும் ரயில் புறப்பட்ட பொழுது கடைசி நேரத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தோளில் பை ஒற்றை மாட்டிக்கொண்டு ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது பின்பக்கமாக சாய்ந்து விழுந்து ரயிலுக்கும் தண்டாவாளத்திற்கும் உள்ள இடைவெளியில் சிக்க இருந்தார். அதைப் பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் சதீஷ்குமார் அவரைக் காப்பாற்றி பிளாட்பாரத்தில் விட்டார். கடைசி நேரத்தில் வந்து ஓடும் ரயில் ஏன் ஏறுகிறீர்கள் என அறிவுரை கூறினார். . பயணிகள் சதீஷ்குமாரை பாராட்டினர். இது தற்போது வைரலாகி வருகிறது.
வாசகர் கருத்து