மாவட்ட செய்திகள் செப்டம்பர் 22,2022 | 00:00 IST
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்விசாரம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் குடிநீர் வழங்கவில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடத்துடன் ஆற்காட்டு - வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆற்காடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.
வாசகர் கருத்து