பொது செப்டம்பர் 22,2022 | 14:09 IST
தருமபுரி சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன். வயது 50. இவரது வீட்டின் 2வது மாடியில் இலியாஸ் என்பவர், மனைவியுடன் வாடகைக்கு குடியிருந்தார். பச்சையப்பன் மகனுக்கு திருமணம் நடக்க இருப்பதால் வீட்டை காலி செய்ய சொன்னார். புதிய வீட்டை வாடகைக்கு பேசிமுடித்தார், இலியாஸ். பொருட்களை எடுத்துச் செல்ல கோபி, குமார் என்ற 2 இளைஞர்கள் வந்தனர். அவர்களுக்கு இலியாஸ், பச்சையப்பன் உதவினார். நால்வரும் சேர்ந்து மாடியில் இருந்து பீரோவை கயிறு கட்டி இறக்கினர். பீரோவில் மின்கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கி 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இலியாஸ், பச்சையப்பன், கோபி மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். குமார் மட்டும் சீரியசான நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து