மாவட்ட செய்திகள் செப்டம்பர் 22,2022 | 00:00 IST
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம், கீவளூரை சேர்ந்தவர் இருசப்பன் இவரது மகன் சஞ்சய். இவரது நண்பர் நேதாஜி இருவரும் பொழிச்சலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றனர். குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை காலடிபேட்டை அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நேதாஜி சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்தபோலீசார் சஞ்சய் உடலை மீட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து