மாவட்ட செய்திகள் செப்டம்பர் 22,2022 | 00:00 IST
தருமபுரி சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன். வயது 50. இவரது வீட்டின் 2வது மாடியில் 70 வயது இலியாஸ், மனைவியுடன் வாடகைக்கு குடியிருந்தார். பச்சையப்பன் மகனுக்கு திருமணம் நடப்பதால், இலியாஸ் வீட்டுக்கு மாறினார். கோபி, குமார் என்ற 2 இளைஞர்களை வைத்து புதிய வீட்டுக்கு சாமான்களை மாற்றினார். இலியாசுக்கு, பச்சையப்பனும் உதவினார். மாடியில் இருந்து பீரோவை கயிறு கட்டி இறக்கியபோது மின்கம்பி உரசி ஷாக் அடித்து 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இலியாஸ், பச்சையப்பன், கோபி மூவரும் அதே இடத்தில் இறந்தனர். குமார் ஆபத்தான நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி தருமபுரி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து