மாவட்ட செய்திகள் செப்டம்பர் 22,2022 | 00:00 IST
சேலம் ஏற்காட்டிலிருந்து 4வயது மதிக்கத்தக்க காட்டெருமை வழி மாறி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சுற்றி வருகிறது. தகவலின் பேரில் ஏற்காடு, சென்னம்பட்டி, ராசிபுரம், நாமக்கல், ஈரோடு, அரச்சலூர் ஆகிய 8 வனச்சரகத்தை சேர்ந்த 40பேர் கொண்ட குழுவினர் தேடி வருகின்றனர். காட்டெருமை உலவிய பகுதியில் உள்ள கால் தடங்களை சேகரித்து பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறும் காட்டெருமை கண்ணில் தென் பட்டவுடன் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து