மாவட்ட செய்திகள் செப்டம்பர் 23,2022 | 00:00 IST
புதுச்சேரி திருபுனைத் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், இவர் பாஜகவிற்கு ஆதரவளித்து வருகிறார். அவருடைய தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் ஆளும் அரசால் புறக்கணிக்கப்படுவதாக பட்ஜெட் தொடரின் போது பேசினார். இந்நிலையில் இன்று அங்காளன் தனது ஆதரவாளர்களுடன் புதுச்சேரி சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், பாஜக ஆதரவு உறுப்பினர்களின் தொகுதிக்கு எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்த கூடாது என்று ரங்கசாமி வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
வாசகர் கருத்து