மாவட்ட செய்திகள் செப்டம்பர் 23,2022 | 00:00 IST
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பணப்பாளையம் டாஸ்மாக்குக்கு அருகில் குடிமகன்களுக்கு விருப்பமான கடல் மீன்கள், ஆற்று மீன்கள் விற்கப்படுகிறது. கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். மீன்களை பொரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் தரம் இல்லாததாகவும், 200 கிலோ கெட்டுப்போன மீன்களை ஃபிரீசரில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அனைத்தையும் பறிமுதல் செய்து ஆசிட் ஊற்றி அழித்தனர். பல்லடம் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகளை ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து