சிறப்பு தொகுப்புகள் செப்டம்பர் 23,2022 | 13:58 IST
கோவை ரயில் நிலையத்தில் சம்பவம் கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சப் இன்ஸ்பெக்டர் அருண் ஜித் தலைமையில் போலீசார் ரமேஷ், மினி, மாரிமுத்து ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பெங்களூரு செல்லும் ரயிலில் இருந்து கடைசி நேரத்தில் சிவகுமார் என்பவர் இறங்கினார். நிலைதடுமாறி விழுந்த அவர், ப்ளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியில் சிக்கினார். இதை பார்த்த போலீசார் நால்வரும் ஒன்று சேர்ந்து சிவகுமாரை இழுத்து காப்பாற்றினர். சிறு காயத்துடன் உயிர் தப்பிய சிவகுமாரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வாசகர் கருத்து