மாவட்ட செய்திகள் செப்டம்பர் 24,2022 | 00:00 IST
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கான மீன் விற்பனையக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் மீன் விற்பதற்கான வசதிகள் இல்லாததால் மீன் ஏலக் கூடத்தில் வியாபாரம் செய்கின்றனர். இங்கு சமூக விரோதிகள் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பை குளங்கள் நிரம்பியும் தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயகரமான இடமாகவும் இது மாறி வருகிறது. இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த கட்டிடத்தை சீரமைத்து மீன்களைப் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்காக மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து