மாவட்ட செய்திகள் செப்டம்பர் 24,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பூஸ்டர் ஊசி போடுவதில் ஆர்வம் காட்டவில்லை. வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், நெல்லியாளம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாலகுமார் தலைமையில் டான்டீ மற்றும் பாரி ஆக்ரோ தேயிலை எஸ்டேட்களுக்கு சென்று தொழிலாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட்டு வருகின்றனர். தேயிலை பறிக்கும் பகுதிகளுக்கு சென்று தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட்டு வருகின்றனர். நாளை ஞாயிறு கடைசி முகாம் நிறைவடைகிறது. இனி வரும் காலங்களில் புதன் தோறும் ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், வியாழன் தோறும் பள்ளிகளில் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.
வாசகர் கருத்து