பொது செப்டம்பர் 25,2022 | 00:00 IST
மகாளய அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமியையும் பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசித்தனர். திருப்புல்லாணி, சேதுகரை, தேவிபட்டினத்திலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.
வாசகர் கருத்து