மாவட்ட செய்திகள் செப்டம்பர் 25,2022 | 00:00 IST
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ளது அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோயில். இங்குள்ள குளக்கரையில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கோவிட் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மகாளய அமாவாசை தினத்தன்று மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு புனித நீராடி ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரரை தரிசித்து ஆர்வமுடன் திதி கொடுத்தனர்.
வாசகர் கருத்து