மாவட்ட செய்திகள் செப்டம்பர் 25,2022 | 00:00 IST
ஆவடியை அடுத்து பட்டாபிராம் இந்து கல்லூரி IAF சாலையை சேர்ந்தவர் 19-வயது இளம்பெண். தந்தை உயிரிழந்ததால் தனது தாயாருடன் உள்ளார். கக்கன்ஜி நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மாருதி (எ) மாறன் . பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடி. கடந்த 21-ம் தேதி அப்பெண் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட ரவுடி மாருதி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த ரவுடி அப்பெண்ணை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பட்டாபிராம் அருகே தலைமறைவாக இருந்த ரவுடி மாருதியை கைது செய்து சிறையிலடைத்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து