மாவட்ட செய்திகள் செப்டம்பர் 26,2022 | 00:00 IST
புதுச்சேரியில் பாஜகவிற்கு ஆதரவு அளித்து வரும் திருபுவனைத் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் தனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை என புகார் கூறி முதல்வர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் என சட்டசபை முன் போராட்டத்தில் ஈடுபட்டார். பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார். இது கூட்டணியில் உள்ள என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தினர். இதனால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
வாசகர் கருத்து