மாவட்ட செய்திகள் செப்டம்பர் 26,2022 | 00:00 IST
நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீடுகள் தோறும் கொலுபொம்மை அலங்காரம் களைகட்டி வருகிறது. நவராத்திரியின் 9 நாட்களும் விழாக்கோலம் தான். விழாவையொட்டி கோவை புலியகுளம் தாமு நகரில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்.மெட்ரிக். பள்ளியில் நவராத்திரி விழாவை ஒட்டி மாணவர்கள் வடிவமைத்திருந்த கொலுபொம்மை கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியை மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ரமாபிரியா செய்திருந்தார். அதேபோல் திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லேவுட் பகுதியில் வீடுகள் தோறும் படிக்கட்டுகள் அமைத்து கொலு பொம்மைகள் கண்காட்சியை தடபுடலாக நடத்தி வருகின்றனர். வீடுகள் தோறும் நடக்கும் கொலு வழிபாட்டு பூஜைகளில் பங்கேற்போருக்கு சுண்டல், அவல் பிரசாதம் வழங்கினர்.
வாசகர் கருத்து