பொது செப்டம்பர் 27,2022 | 22:38 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றியவர் செண்பகவல்லி. 2005ல் ஓய்வு பெற்றார். இறப்புக்கு பின் தன் உடலை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு வழங்க வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார். உடல்நலக்குறைவால் இறந்த செண்பகவல்லி உடலை குடும்பத்தினர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். செண்பகவல்லியின் கணவர் கணேசனும் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 2017 ல் அவரது உடலும் தர்மபுரி அரசு மருத்துவகல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து