அரசியல் செப்டம்பர் 27,2022 | 22:44 IST
விழுப்புரம் மாவட்டம் பெரியபாபு சமுத்திரத்தை சேர்ந்தவர் சரவணன். திமுகவை சேர்ந்தவர். கண்டமங்கலம் ஒன்றியக்குழு கவுன்சிலராக உள்ளார். இவர் விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தார். புதுச்சேரி சோரப்பட்டு பகுதியில் ஒரு வீட்டு முன் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதுபற்றி வீட்டு உரிமையாளரிடம் திருக்கனூர் போலீசார் விசாரித்தபோது, சரவணன்தான் லாரியில் மணல் கடத்தி வந்து சப்ளை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டதாக, சரவணனை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
வாசகர் கருத்து