பொது செப்டம்பர் 28,2022 | 00:19 IST
பூம்புகார் துறைமுகத்திலிருந்து கடந்த 25ம் தேதி 16 மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரை அருகே செல்லும் போது படகின் இன்ஜின் பழுதடைந்தது. அப்போது அவ்வழியாக சிறிய படகு வந்தது. அதில் 4 பேர் மட்டும் ஏறிக் கொண்டனர். மற்றவர்கள் பழுதான படகிலேயே இருந்தனர். நாகை துறைமுகத்துக்குதிரும்பியதும் கடலோர காவல் படையினரிடம் நான்கு மீனவர்களும் விஷயத்தை கூறினர். உடனே வீரர்கள் படகை தேடி சென்றனர். அவர்கள் சொன்ன இடத்தில் படகு எதுவும் இல்லை. காற்றின் வேகத்தில் படகு திசை மாறி சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து