மாவட்ட செய்திகள் செப்டம்பர் 28,2022 | 00:00 IST
புதுச்சேரியில் உள்ள மின்துறையின் 100 சதவீத பங்கை தனியார் மயமாக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மின்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை முதல் காலவரையின்றி வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் உள்பட 2500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனனர். ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மின்துறை பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து