Advertisement

பிரமாண்ட அறையில் தத்ரூபமாக கைலாயம் பனிலிங்கம்

நவராத்திரி வீடியோ செப்டம்பர் 28,2022 | 18:25 IST

Share

நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியுள்ளது முப்பெரும் தேவியரை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சேலையூர் சுதர்சன்நகரை சேர்ந்த சித்திதேவி என்பவர் வருடாவருடம் அவரது வீட்டில் கொலு வைப்பது வழக்கம் அதேபோல் இந்த வருடம் அவர் வீட்டையே கைலாயமாக மாற்றி இருகின்றார் அவர் வீட்டின் இரண்டாவது தளத்தில் கயிலாயம் போன்ற சூழலை தத்ரூபமாக அமைத்து அதில் தேவர்கள் சித்தர்கள் புடை சூழ சிவபெருமான் தியானத்தில் இருப்பது போன்று அமைத்திருப்பதோடு மின் விளக்குகளால் ஒளிரக்கூடிய பணி சிவலிங்கத்தையும் அமைத்துள்ளார் இது கயிலாயத்தில் இருப்பது போன்ற உணர்வையும் பக்தி பரவசத்தையும் ஏற்படுத்துவதால் ஏறாளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் இதனை கண்டு வருகின்றனர் மேலும் அந்த கொலுவில் பெருமாள் அவதாரங்கள், புரான கதைகள், மக்கள் வாழ்க்கை முறை போன்றவற்றை விளக்கும் விதமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகளால் கொலு அமைத்துள்ளார் மேலும் வீட்டிற்க்கு வரும் அனைத்து பெண்களையும் கால்களில் திலகம் இட்டு, தாம்பூலம் அளித்து வரும் சித்திதேவி அனைத்து பெண்களும் அம்மன் வடிவமாக பார்க்க வேண்டு என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X