Advertisement

மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து!

மாவட்ட செய்திகள் செப்டம்பர் 29,2022 | 00:00 IST

Share

பொள்ளாச்சி அருகே தாமரைக்குளத்தில் தனியார் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 20- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். நேற்று வழக்கம் போல பணிகளை முடித்துவிட்டு தொழிலாளர்கள் வீட்டுக்கு சென்றனர். இன்று அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் திடீரென மூலப்பொருள் வைத்திருந்த குடோனில் தீ பற்றியது. மளமளவென பரவி பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்த தீயணைப்புவீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமானது. போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X