Advertisement

இருதய நோய் விழிப்புணர்வு!

மாவட்ட செய்திகள் செப்டம்பர் 29,2022 | 15:19 IST

Share

உலக இதய தினத்தையொட்டி கோவை பி.ஜி.நர்சிங் மற்றும் மனையியல் அறிவியல் கல்லூரி, அஸ்வின் மருத்துமனை சார்பில் கல்லூரி மாணவ,மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதய நோய் வராமல் தடுக்க உணவு முறை, உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. பேரணியை பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு கொடியசைத்து துவக்கி வைத்தார். தாளாளர் சாந்தி தங்கவேலு, சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமணி ஆகியோர் பங்கேற்றனர். தினமும் உடற்பயிற்சி செய்வது, உடலுக்கு கேடு விளைவிக்கும் புகை பழக்கம், மது அருந்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X